Search This Blog

Friday 26 August 2011

செல்வச் செழிப்புக்கு மாறுவோம்


வாழ்வியல் நுட்பங்கள்
செல்வச் செழிப்புக்கு மாறுவோம்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

என் இனிய நண்பர்களே! செல்வச் செழிப்பான வாழ்க்கைகு செல்வந்தர்கள் புத்தியைக் கொண்டு மென்மையாக உழைத்தார்கள் என்றும், கடுமையாக உழைத்தவர்கள் வறுமையைத்தான் கண்டார்கள் என்று பார்த்தோம். அதுமட்டும் அல்லாமல் செல்வந்தர்கள் தங்கள் தொழிலில் வெற்றியை பல சவால்களைச் சந்தித்துதான் பெற்றார்கள் என்பது தெரியும்தானே?. அப்படிப்பட்ட சவால்களில், மிக முக்கியமான ஒன்று, பெரும் பணத்தை முதலீடு செய்யது நஷ்டம் அடையாமல் போட்டி உலகில் வெற்றி காணும் சவாலாகும். நான் உங்களுக்கு இப்படிப்பட்ட சவால்களை எல்லாம் சந்திக்க கூப்பிடவில்லை. நாம் புத்தி கொண்டு மென்மையாக உழைப்பதோடு. ஒரு உத்தியையும் கொண்டு உழைக்க அழைக்கிறேன். அந்த உத்தி ஒரு நெம்புகோல் உத்தியாகும். ஒரு பெரும் பாறையை நெம்புகோல் கொண்டு சுலபமாக உந்தித்தள்ளுவது போல் நாமும் வறுமையை ஊதித்தள்ளி, செல்வச் செழிப்புக்கு மாறமுடியும். அந்த நெம்புகோல் வேறெதுவும் இல்லை, நெட் ஒர்க் மார்கெட்டிங்தான். ஆகா, நீங்களுமா இதற்கு வக்காளத்து வாங்குகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஒரு வெற்றிகரமான தொழிலதிபரையும் தாண்டி விரைவாக நீடித்த செல்வச் செழிப்பை உண்டாக்க முடியும் என்றால் அது நெட் ஒர்க் மார்கெட்டிங்கால்தான் முடியும். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
வெற்றிகரமான தொழிலதிபரின் சவால்கள்
அவற்றை நாம் வெற்றி கொள்ளும் வழிகள்
1. அதிக முதலீடு: ஆயிரங்களை சம்பாதிக்க இலட்சங்களையும், இலட்சங்களை சம்பாதிக்க கோடிகளையும் முதலீடாக போட வேண்டும்.
1. மிகக்குறைந்த முதலீடு: சில ஆயிரங்களைப் போட்டு பல இலட்சங்களையும் நம் இலட்சியங்களையும் அடையலாம்.
2. முழு நேரம் பிஸினஸ்: பிஸினஸ் நம் நேரத்தை முழுமையாக முழுங்கி விடும்.
2. பகுதி நேர பிஸினஸ்: தினமும் இரண்டு மணி நேரம் இதற்காக செலவழித்தால் போதும்.
3. போட்டி உண்டு: எத்தனைக் காலம் தொழிலை வெற்றிகரமாக செய்திருந்தாலும், போட்டியாளர்கள் அவரை ஜெயிக்காத வரைதான் நிலைக்கும்.
3. போட்டி இல்லை: உங்களை நம்பி வந்தவர்களை ஜெயிக்க உதவினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
4.பிஸினஸ்நடக்காவிட்டால் நஷ்டம்: வர்த்தகம் வெற்றிகரமாக நடைபெறாவிட்டால் நஷ்டம்தான் (கடை வாடகை, மின்சாரக் கட்டணம், வேலையாள் சம்பளம், விரைவாக அழியக்கூடிய பொருளாக இருந்தால் பொருள் நஷ்டம் முதலியன தவிற்க முடியாது)
4. பிஸினஸ் நடக்காவிட்டால் நஷ்டம் இல்லை: விரைவாக அழியக்கூடிய பொருட்கள் எதையும் கையாளாததால் விற்பனை நடைபெறாவிட்டாலும் நஷ்டம் இல்லை. மேலும் பொருட்கள் எதையும் இருப்பு (Stock) வைக்க வேண்டியதில்லை ஆகையால், கஷ்டமும் இல்லை.
5. தொழில் நடத்த இடம் வேண்டும்: பிரதானமான நகரப்பகுதியில் பிரதான தெருவில் வர்தக இடம் அமைந்தால்தான் வருமாணம் சிறக்கும்.
5. இடம் ஒரு பொருட்டல்ல: நம் வீடுதான் வர்த்தகம் நடக்கும் இடம். அது ஒரு குக்கிராமத்தில் கூட இருக்கலாம், வெற்றி காண முடியும்.
6.நிலையான வருமானம் நிச்சயம் இல்லை: எவ்வளவு நல்ல வருமானத்தை எட்டியிருந்தாலும், இந்த நிலை அப்படியே நிலைக்கும் என்று அருதியிட்டு கூற முடியாது. வருமான பாதுகாப்பு நிச்சயமாக இல்லை. வர்தக நிலமையோ வர்தகர் நிலமையோ பாதகமானால் வருமாணம் பாதிக்கும்.


6. நிலையான தொடர் வருமானம்: நமக்கான பிஸினஸ் அமைப்பை ஏற்படுத்திவிட்டபின் நிலையான வருமாணம் தலைமுறைக்கும் நிலைக்கும். காரணம், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பொருட்களின் (Fast Moving Consumer Goods) உபயோகத்தைச் சார்ந்தும், குழுவின் பலம் சார்ந்தும் இருப்பதாலும் வருமாணம் நிலைத்துப் பெருகும்
7. முன் அனுபவம்அவசியம்: முன் அனுபவம் இல்லை என்றால், நஷ்டப்பட்டுதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முன் அனுபவம் பெற்ற சக தொழில் அதிபர் எவரும் தொழில் முனைவோருக்கு கற்றுத் தருவதில்லை. நாமேதான் கற்றுத் தேர வேண்டும்.
7. மேலே உள்ளவரின் அனுபவ வழிகாட்டுதல்: முன் அனுபவம் இல்லாமல் வியாபாரத்தில் இறங்கலாம். இந்த வியாபாரத்தில் ஜெயித்தவர்களின் வெற்றி அனுபவ வழி காட்டுதலில், கற்றுக்கொண்டே படிப்படியாக முன்னேரலாம்.
8. ஆரோக்கியம் பாதிக்கப் படலாம்: அதிக முதலீடு போட்டிருப்பதாலும், போட்டி உலகில் போராடுவதாலும் இடைவிடாத மன உளைச்சலும் (Stress), அசராத உழைப்பால் உடல் தேய்மானமும் (Strain) கண்டிப்பாக உண்டு. இதை சரி செய்து கொள்ள தன் சம்பாத்தியத்தின் கணிசமான பங்கை தன் தொழில் அமைப்புக்கு வெளியே செலவு செய்து மீட்க வேண்டி வரும்.
8. ஆரோக்கியத்தை உள்ளடக்கியது: போடாத முதலீட்டை மீட்க வேண்டாததாலும், போட்டியே இல்லாததாலும் மன உளைச்சல் இல்லை. கூடுதல் உழைப்பால் ஏற்படும் உடல் தேய்மானத்தை ஈடு செய்யத் துணை உணவுப் பொருட்கள் (Food Supplements) இந்த அமைப்பிலேயே இருப்பதால் இதற்காகச் செய்யும் செலவும் விற்பனைக் கணக்காகி, லாபமும் ஆரோக்கியமும் கிடைக்கிற்து.
9. தலைமுறை வருமானம் இல்லை: தன் தொழிலைத்தான் தன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியும், வருமானத்தை அல்ல.
9. தலைமுறை தொடர் வருமானம் உண்டு: தன் தொடர் வருமானத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றித்தர முடியும்.
10. நாம் நின்றால் வருமானம் நின்றுவிடும்: உடல் ஒத்துழைக்கும் வரையோ அல்லது ஓய்வு பெரும் வரையோ தொழில் செய்தாலும், நிறுத்திய உடன் வருமாணம் நின்று விடும்.
10. நாம் நின்றாலும் வருமானம் நிற்க்காது: வலைப் பின்னல் வியாபாரம் நம் முனைப்பையும் தாண்டி வளர்ந்து கொண்டே போவதால், தலைமுறைகளைத் தாண்டி நிற்கிறது.
11. வேலை ஆட்களுக்கு சம்பளம்: இலாபம் வந்தாலும் வராவிட்டாலும் வேலை ஆட்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும்.
11. அவர்களே சம்பாதித்து கொள்வார்கள்: நம் கீழ் வருபவர்கள் வேலை ஆட்கள் அல்ல, அவர்கள் நம் நண்பர்களாவார்கள். அவர்களுக்கு வழியும், உதவியும் செய்தால் அவர்களே சம்பாதித்து கொள்வார்கள்.
12. முப்பது வருடம் படாதபாடு: முப்பது வருடம் உழைத்துவிட்டு நிறுத்தினாலும், வருமானம் நின்று வசதி குறைந்துதான் போகிறோம். பின் இதற்கா இந்தப் பாடு?
12. இரண்டிலிருந்து ஐந்து வருடத்தில் ஓய்வு: வெற்றியாளர்களின் வழி காட்டுதலில் முறையாகச் செய்தால் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களில் நிலையான தொடர் வருமானத்தோடு ஓய்வாகலாம்.

வலைப் பின்னல் வியாபாரம், ஒரு அருமையான நெம்புகோல் !
வளமான மனத்துடன் செல்வச் செழிப்பை உண்டாக்குவோம் !

4 comments:

  1. மாய வலையில் சிக்காதே கிச்சு.சட்டவிரோதம் உனது வலை பின்னல் வியாபாரம்.ஆங்கிலத்தில் இதன் பெயர் multi level marketing

    ReplyDelete
  2. இயற்கை மருத்துவம்,வாழும் கலை,மன வள கலை போன்றவற்றில் ஈடுபாடு வரவேற்க தக்கது.வலை பின்னல் வியாபாரம் நேர்மையானதல்ல.

    ReplyDelete
  3. திரு அசோகன் அவர்களுக்கு. அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள ஒரு சர்வதேச வர்த்தக அமைப்பை சட்ட் விரோதம் என்று கூறுவது அநியாயம். அடுத்து வழி வழியாக நம் நடுத்தர வர்கம் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் அவலமான பொருளாதார கோட்ப்பாடுகளைக் களையவே இக்கட்டுரை. அது புரியாவிட்டால் மீண்டும் மீண்டும் படிக்கவும். நம் ஞானக் கண் திறக்கட்டும். நம் வாழ்வில் நேர சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் மற்றும் ஆரோக்கிய சுதந்திரம் மலரட்டும். எல்லோரும் எல்லாமும் பெறுவோம்.

    ReplyDelete
  4. அன்பு அசோகன் அவர்களுக்கு அனுராதா கிருஷ்ணன் எழுத்துவது. தங்களின் இயற்கை மருத்துவ நன்மதிப்பீட்டிற்கு சந்தோஷம். தாங்கள் குறிப்பிடுவதுபோல் நான் ஒரு இயற்கை மருத்துவன் அல்ல. I am not a practitioner of naturopathy. நான் என்ன விதமாக வைத்தியம் பார்க்கிறேன் என்று தங்களுக்கு முழுமையாகத்தெரியாது ஆகையால், தாங்களாக ஒரு முடிவுக்கு வந்துள்ளதும் சரியல்லதான். உண்மையில் நான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்து அல்லது புரிந்து பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ செய்வதுதான் நல்லது என்று எனகுப்படுகிறது. ஆகவே, நான் என்ன செய்கிறேன் என்று தெரிந்துகொள்ள எண்ணம் இருந்தால் தாங்கள் என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதுவரை அவசரப்பட்டு விமர்சனம் வேண்டாம்.

    ReplyDelete