Search This Blog

Friday 26 August 2011

விலைவாசியை வென்று வாழ்வோம்


வாழ்வியல் நுட்பங்கள்
விலைவாசியை வென்று வாழ்வோம்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

வாழ்கை போராட்ட கள வீரர்களே! போராட்டம்தான் வாழ்க்கை என்று நமக்கெல்லாம் கற்பிக்கபட்டுள்ளதால் அதனோடு மல்லுக்கு நிற்பதே வேலையாகிப் போச்சு. மல்லுக்கு நின்று வெற்றி பெற்ற ஒன்றையாவது நம் வாழ்க்கையில் இதுவரைக் கண்டோமா என்று கவனித்தோமானால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சும். ஆக, மல்லுக்கு நிற்பதை விட்டு, சமயோசிதமாக வாழ்கையை கையாண்டால் வெற்றி கொள்வோம். வாழ்க்கை போலவே, நம் வாழ்க்கை களத்தில் நமக்கு சவாலாக இருப்பது விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வுக்காக கவலைப்பட்டாலும், போராட்டம் நடத்தினாலும் விலைகள் குறையப் போவதில்லை. நிதியமைச்சரே ஆணையிட்டாலும், சர்வதேச நிதி நிறுவனமே தலையிட்டாலும் குறையப் போவதில்லை. அது அவர்களின் கைகளில் நிச்சயமாக இல்லை. பின் நாம் எப்படித்தான் சமாளிப்பதாம். பார்த்தீர்களா? நான் உங்களை போராடவோ, சமாளிக்கவோ சொல்லவில்லை. சமயோசிதமாகக் கையாளச் சொல்கிறேன். அது பற்றி இங்கு பார்ப்போமா?.

இனிய இல்லத்தரசிகளே!, உங்கள் வீட்டு மளிகைச் செலவுக்கு, ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக வைத்துக் கொள்வோம். அதே மளிகைப் பட்டியலை அடுத்த மாதம் அதே கடையில் வாங்கப்போனால் விலை எவ்வளவு கூடும் தோராயமாகச் சொல்ல முடியுமா?. சுமார், ஐம்பது ரூபாய் ஏறுவதாக வைத்துக் கொள்வோம். ஆக, ஆறு மாதம் ஆனால் ரூ 1300ம், ஒரு வருடம் கழித்து ரூ 1600மாக இருக்கும். ஆக, மாதம் மளிகைக்கு ரூ 1000 செலவு செய்யும் போது, நாம் வீட்டிற்கு ரூ 10,000 கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம் (மளிகை செலவு போல் நமக்கு பத்து செலவுகள் காத்திருக்கின்றன). அப்படி பார்க்கும் போது, விலை உயர உயர அதற்கு தக்கபடி




சம்பளத்தையா உயர்த்துகிறார்கள்?. எவ்வளவுதான் சம்பளம் உயர்த்தினாலும் விலைவாசி அதையும் தாண்டியதாகத்தான் எப்போதும் இருக்கும். நாமும், அடுத்த சம்பள உயர்வு வந்தால் சமாளித்து விடலாம் என்று காத்திருந்து காத்திருந்து விலைவாசியிடம் ஏமாந்துதான் போகிறோம். இதற்கு விடிவே இல்லையா?. இனிய நண்பர்களே!, தொற்று நோய் கிருமியை அழிக்க முடியாது, ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். அது போலவே, விலைவாசி உயர்வை ஒழிக்க முடியாது, ஆனால் அது நம்மை பாதிக்காமல் இருக்க தடுப்பு உத்திகளை கையாள முடியும். அந்த தடுப்பூசிதான் வலை பின்னல் வியாபாரம். அது பற்றி இனி பார்ப்போம்.

நாம் சந்திக்கும் உலகம்
(Conventional Marketing)
வலை பின்னல் வர்த்தக உலகம்
(Network Marketing)
1. விலை உயர்வு முழுமையும் நம் தலையில்: ஒரு பொருள் ரூ. 100க்கு விற்றது, கடும் விலைவாசியால் ரூ. 200ஆக விற்குமானால், அதிகப்படியான ரூ. 100ஐ நாம்தான் கொடுக்க வேண்டும்.
1. விலை உயர்வால் பாதிப்பு குறைவு: அதுவே, இந்த வர்தகத்தில், ரூ. 100ஆக விற்கும் போது ரூ. 80யும் ரூ. 200 ஆக விற்கும் போது ரூ. 160 மட்டுமே நாம் கொடுப்போம்.
2. விலை ஏற ஏற நம் வசதி குறைகிறது: விலைவாசி ஏறும் போது நமக்குச் சம்பளம் உடனடியாக ஏறுவதில்லை. விற்பவருக்குத்தான் இலாபம், வாங்கும் நமக்கு பாரம்தான்.
2. விலை ஏற ஏற வசதியாகிறோம்: விலை ஏறும் போது, நமக்குத் தள்ளுபடியும், ஊக்கத்தொகையும் சதவிகிதத்தின் அடிப்படையில் இருப்பதால் வருமாணமும் அதிகரிக்கிறது.
3. விற்பனை வரி கூடுதல்: விலை ஏறினால், கூடுதல் விலைக்கும் சேர்த்து விற்பனை வரி வசுலிக்கப்படுகிறது.
3. விற்பனை வரி சற்று குறைவு: கொள்முதல் விலையின் மீதுதான் விற்பனை வரிப் போடப் படுவதால், விலை ஏறினாலும் விற்பனை வரி வெளி மார்கெட்டைக் காட்டிலும் சற்று குறைவாகவே இருக்கும்.
4. வருமானத்தைத் தாண்டிய விலைவாசி: நமக்கு எவ்வளவுதான் சம்பளம் உயர்ந்தாலும் விலைவாசி அதையும் தாண்டிதான் விலைவாசி இருக்கும். முந்தைய விலைவாசி விகிதத்தை கணக்கிட்டு மாதங்கள் பல கடந்தபின்தான் பிந்தைய சம்பளத்துடன் தருவார்கள். அப்போதைய விலைவாசி அதையும் தாண்டியதாக இருக்கும்.
4. விலைவாசியைத் தாண்டிய பன் மடங்கு வருமானம்: வலை பின்னல் வியாபார வருமானம் பெருக்க விகிதத்தில் இருப்பதால், நமது வருமானம் விலைவாசியைப் பல மடங்கு தாண்டியதாகவே இருக்கும்.
5. வாழ் நாள் முழுவதும் போராட்டம்: முப்பது வருடங்கள் நாம் விலைவாசியுடன் போராடிவிட்டு, பின் அடுத்த தலைமுறைக்கும் அதே போராட்டத்தை விட்டுச் செல்வோம்.
5. போராட்டம் 2 முதல் 5 வருடங்கள்தான்: வெற்றியாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் விலைவாசி போராட்டத்தில் இருந்து 2 முதல் 5 வருடங்களில் வெளிவந்துவிடலாம்.
விலைவாசியை வெல்லும் சூத்திரம் அறிந்தோம் !
விரைந்து செயலாற்றி விடுபடுவோம் விலைவாசியிலிருந்து !

No comments:

Post a Comment